PUBLISHED ON : பிப் 20, 2022

அ நிறம் | அளவு
படத்திலுள்ளவர் பெயர், சுரேஷ்; வயது, 45. கோழிக்கோடு, வயநாடு மேப்பாடி மலை கிராமத்தில் வசிக்கிறார். இவர், உயிருள்ள பாம்பு, தேள், மீன், தவளை, பல்லி, பூரான், புழுக்கள் என, அத்தனை ஜீவராசிகளையும் அப்படியே சாப்பிட்டு வியக்க வைக்கிறார். இவர் தன்னை இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொள்கிறார்.
வைத்தியர் என்பதால் வயதான மனிதர் என, நினைத்து விடாதீர். ஜீன்ஸ் பேன்ட், டீ - ஷர்ட், கேன்வாஸ் ஷூ அணிந்து, மிடுக்காக காட்சியளிக்கிறார்.
'மனிதனை வாட்டி வதைக்கும் எந்த நோயானாலும், எந்த நிலைமையில் இருந்தாலும் அதை குணமடைய செய்வேன்...' என்று, சவால் விடுகிறார் இந்த இயற்கை வைத்தியர்.
— ஜோல்னாபையன்
