
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருப்பவர் பெயர், ஸ்ரீஜினா, வயது, 35.
கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன், கர்ப்பமானபோது லேசான நெஞ்சு வலி ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட, இ.சி.ஜி.,யில், ஸ்ரீஜினாவின் இதயம் வலப்பக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
'வலப்பக்கம் இதயம் இருப்பதை அறிந்தபோது, அதிர்ச்சி அடைந்தேன். ஆனால், இதுவரை எவ்வித பிரச்னையும் இல்லாமல் கணவர், 13 வயது மகளுடன், கேரள மாநிலம், திருக்கரிப்பூர் என்ற இடத்தில் வசித்து வருகிறேன்...' என்கிறார்.
ஜோல்னாபையன்