
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரபு நாடான ஓமனின் மஸ்கட் நகரில் வசிக்கும் மரியம், 51, இரக்கமுள்ள குணத்தால், சர்வதேச நாடுகளின் கவனத்தை, தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
இளம் வயதிலிருந்தே, விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம் உடைய இவர், பெரிய வீடு முழுவதையும், தெரு நாய், பூனைகள் ஆகியவற்றை வளர்ப்பதற்காக பயன்படுத்தி வருகிறார்.
இவரிடம் தற்போது, 480 பூனைகளும், 50க்கும் மேற்பட்ட நாய்களும் உள்ளன. இந்த விலங்குகள், மரியமின் பங்களா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக உலா வருகின்றன.
தெருக்களில் கைவிடப்படும் நாய், பூனைகளை, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, பராமரித்து வளர்ப்பதையே, நோக்கமாக வைத்துள்ளார். இதற்காக, மாதம், இவருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறதாம்.
— ஜோல்னாபையன்