/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இனி, மொபைல் போனை சோப்பு போட்டு கழுவலாம்!
/
இனி, மொபைல் போனை சோப்பு போட்டு கழுவலாம்!
PUBLISHED ON : ஜன 17, 2021

மழை பெய்யும் நேரங்களில், தண்ணீர் பட்டு விடாமல் மொபைல் போன்களை பாதுகாப்பது, மிகப்பெரிய வேலையாக இருக்கும்; இனி, அந்த கவலை வேண்டாம்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 'புலிட்' என்ற நிறுவனம், நவீன தொழில்நுட்ப உதவியுடன், புதிய மொபைல் போனை தயாரித்துள்ளது.
இந்த மொபைல் போனை, சோப்பு போட்டு கழுவலாம். தண்ணீரில் நனைந்து விடும் என்ற பயம் இல்லாமல், மழை நேரத்திலும் வெளியில் எடுத்துச் செல்லலாம். அதற்கு ஏற்ற வகையில், இதன் வெளிப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
'கொரோனா' போன்ற தொற்றுநோய் காலத்தில், 'சானிடைசர்' வாயிலாக, இந்த மொபைல் போனை சுத்தம் செய்யவும் முடியுமாம். பிரிட்டனில், விரைவில் இது விற்பனைக்கு வரவுள்ளது.
— ஜோல்னாபையன்