
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில், 'ஜமா கெய்தல்' என்ற பழம்பெரும் மார்க்கெட், 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
'மகளிர் சந்தை' என்று அழைக்கப்படும் இந்த மார்க்கெட்டில், திருமணமான பெண்கள் மட்டும் தான், வியாபாரம் செய்ய முடியும். ஆண்கள், இங்கு வந்து பொருட்கள், வாங்கலாம். திருமணமாகாத பெண்கள், உதவியாளர்களாக பணிபுரியலாம்.
இந்த மார்க்கெட்டில், அனைத்து விதமான காய்கறிகளும், பழங்களும் விற்கப்படுகின்றன. ஆனால், மாமிசம் விற்கப்படுவதில்லை. கருவாடுகளுக்கென தனிப் பிரிவே செயல்பட்டு வருகிறது.
— ஜோல்னாபையன்