/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
'ஹை ஹீல்ஸ்' வடிவில் கண்ணாடி தேவாலயம்!
/
'ஹை ஹீல்ஸ்' வடிவில் கண்ணாடி தேவாலயம்!
PUBLISHED ON : பிப் 21, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தைவான் நாட்டின், ஜாயி மாகாணத்தில், புதாய் என்ற நகரத்தில், 'ஹை ஹீல்ஸ் ஷூ' வடிவில், 320 கண்ணாடித் துண்டுகளை பொருத்தி, கண்ணாடியிலான, தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இரவில், நீல நிறத்தில் ஜொலிக்கும் இந்த தேவாலயத்தின் ரம்மியமான அழகைக் காண்பதற்காகவே, இங்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கடந்த 1960ல், இந்நாட்டு பெண்களில் பெரும்பாலானோர், 'ஹை ஹீல்ஸ்' பிரச்னையால், குதிகாலில் அரிப்பு போன்ற நோயால் பாதிக்கப்பட்டனராம். அதை நினைவுபடுத்தும் வகையில், இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
— ஜோல்னாபையன்.

