
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்ஸ் நாட்டில், நான்டெல் என்ற நகரத்தில், மிகப் பிரமாண்டமான அளவில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா உள்ளது. இங்கு, பழைய இரும்பு மற்றும் மரங்களால் ஆன, மிகப் பெரிய ராட்சத இயந்திர யானை அமைக்கப்பட்டுள்ளது. 45 டன் எடை, 12 மீட்டர் உயரமுள்ள இந்த இயந்திர யானையில், 50 பேர் பயணிக்க முடியும். கட்டணம் கொடுத்து, இந்த யானையில் ஏறி அமர்ந்தால் போதும்... விளையாட்டு பூங்காவை, ஒரு ரவுண்டு வரலாம். வித்தியாசமான இந்த அனுபவத்தை பெறுவதற்காகவே, உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு, குவிகின்றனர்.
— ஜோல்னாபையன்.

