PUBLISHED ON : பிப் 21, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நைட் கிளப்'பிற்கு செல்ல கூச்சப்படும் காதலர்களுக்காக, ஜெர்மனியின் பெர்லின் நகரில், ஐந்து இடங்களில், 'டெலி டிஸ்கோ' என்ற பெயரில், மிகச் சிறிய நைட் கிளப் இயங்கி வருகிறது. டெலிபோன் பூத் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நைட் கிளப்பில், இரண்டு பேர் மட்டுமே இருக்க முடியும்.
வெளியில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில், கட்டணத்தை செலுத்தி விட்டு, உள்ளே செல்லலாம். உள்ளே இருப்பவர்கள், வெளியில் வந்தால் தான், அடுத்த ஜோடி, உள்ளே செல்ல முடியும். இட வசதி மிக குறைவாக இருந்தாலும், வழக்கமான நைட் கிளப்புகளில், என்னென்ன வசதிகள் உண்டோ அவை அனைத்தும், இதிலும் உள்ளன.
— ஜோல்னாபையன்.

