PUBLISHED ON : பிப் 17, 2013

அ நிறம் | அளவு
அமெரிக்காவைச் சேர்ந்த, இந்த பிரமாண்ட பெண்மணியின் பெயர், மைக்கேல் ரூபினெலி, வயது 39. இவர், உலகில் மிகவும், ஸ்பெஷலான பெண்மணியும் கூட. உலகிலேயே, மிக பிரமாண்டமான, பெரிய இடுப்பு உடைய பெண், இவர் தான். இவரது இடுப்பின் சுற்றளவு எவ்வளவு தெரியுமா? எட்டு அடி. 'மெல்லிடையாள், கொடியிடையாள் ஆகியோரை மட்டும் தான், சாதனைப் பெண்களாக கருதுவீர்களா? என் போன்ற, பிரமாண்ட இடையாளையும், சாதனையில் இணைத்துக் கொள்ளுங்கள்...' என, சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார், ரூபினெலி. இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. 'எப்படி, இந்த மெகா இடுப்புடன் வலம் வருகிறீர்கள். கஷ்டமாக இல்லையா?' என, கேட்டால், 'கஷ்டமா... என் இடுப்பின் அழகை, ஒவ்வொரு நிமிடமும், அனுபவித்து, ரசித்துக் கொண்டிருக்கிறேன்...' என்கிறார்.
— ஜோல்னா பையன்.
