தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : பிப் 17, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கே தேடுவேன்?

* புழுதிப்படர்ந்த சாலையில்

வெப்பக் காற்றை

உள்வாங்கி

நெருப்பை உமிழ்ந்து

கொண்டே தேடுகிறேன்...

* ஆடி ஓடி விளையாண்ட

அகன்ற வீதிகளை...

* பாதசாரிகள் படுத்துறங்க

நிழல் தந்த

பாதையோர புளியமரங்களை...

* தும்பி பிடிக்க

தம்பியர் புடைசூழ சென்ற

தான் தோன்றி மலையை...

* காட்டுக் குயில்களின்

கானம் ஒலித்த

கருவேலம் காடுகளை...

* அகன்று விரிந்து

ஆர்ப்பரித்துச் சென்ற

ஆற்றுப் படுகையை...

* காட்டு வெள்ளம்

வந்து போகும்

காட்டாறு ஓடைகளை...

* பார்த்து ரசித்து

பரவசப்பட்டுப் போன

பசுமையான வயல்வெளிகளை...

* கருத்தை கவர்ந்த

காதலியுடன்

கதைகள் பல பேசி

காலம் கரைத்த

கண்மாய்க் கரைகளை...

* என் இளமையை

தாலாட்டிய இயற்கையே...

* பேராசை பேய்களின்

பெருத்த வயிற்றுக்குள்

இரையாகிப் போன

உன்னை எங்கே தேடுவேன்?

ப.லட்சுமி, கோட்டூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us