தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு!

3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு!

3500 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பு!


PUBLISHED ON : ஏப் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரபரப்பான நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் போன்ற காரணங்களால் தான், இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு வருவதாக இப்போது பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால், 3,500 ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்களுக்கு இதய நோய் உண்டு என, ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

அதுவும் எப்படிப்பட்ட ஆராய்ச்சி தெரியுமா? எகிப்து நாட்டில் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த, 'மம்மிஸ்' என அழைக்கப்படும் இறந்தவர்கள் உடலை ஸ்கேன் செய்து பார்த்து, கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்து நாட்டில் ஆட்சி செய்து வந்த அரசர்கள், அரசிகளின் உடல்கள், மிக பிரமாண்டமான பிரமிடுகள், கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அந்த உடல்கள், கெட்டுப் போகவில்லை, அளவு மட்டும் சுருங்கி காணப்படுகின்றன. உடல்கள் கெட்டுப் போகாத அளவு, பிரமிடுகளில் அவைகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிரிகோரி தாமஸ் தலைமையிலான குழு, கடந்த சில மாதங்களாக, எகிப்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிகள் உடலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இவ்வாறு, 53 உடல்களை மிக அதி நவீன, 'சிடி' ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் துல்லியமாக ஆராய்ந்தனர். மேடம் ராய் என்ற உடல் இதில் மிகவும் பழமையானது. கி.மு., 1580 முதல், 1550ம் ஆண்டு வரை வாழ்ந்த இளவரசி இவர். இந்த பெண், தன், 40வது வயதில் மரணமடைந் திருப்பார் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட உடல்கள் எல்லாமே அரச குடும்பத்தினர், மற்றும் அவர்களது ஊழியர்களாகத்தான் இருப்பர் என்றும் நம்பப்படுகிறது. அவர்கள் என்ன வகையான உணவுகளை உட்கொண்டிருப்பர் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஆடு, மாடு, கோழி, வாத்து என, அசைவ உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்திருப்பர்.

அவர்கள் உடலில் ஆராய்ச்சி செய்த போது, 45 சதவீதத்தினர் இதயத்தில், கால்சியம் அதிக அளவு படிந்திருப்பதை காண முடிந்தது. எனவே, அவர்களில் பெரும்பாலானோர், மாரடைப்பால் தான் மரணமடைந்திருக்கக் கூடும் என்றும், அந்த காலத்திலேயே இதய நோய்கள், மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாக இருந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

எனினும், 'இந்த ஆராய்ச்சியின் காரணமாக, இப்போதைய ஆராய்ச்சிகளை குறை கூற வேண்டாம்...' என, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட எகிப்து கெய்ரோ பல்கலைக்கழக டாக்டர் ஆடல் அலாம் கூறியுள்ளார். 'புகை பிடிக்கும் பழக்கம் இல்லாவிட்டால், ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும், கொழுப்பு சேராது. இதனால், இதய குழாய்களில் கால்சியம் சேராது என, சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன...' என்கிறார் இவர்.

***

- ஏ. அஞ்சனா தாஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us