sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கோடிகளில் உருவாக்கப்பட்ட சொர்க்கம்!

/

கோடிகளில் உருவாக்கப்பட்ட சொர்க்கம்!

கோடிகளில் உருவாக்கப்பட்ட சொர்க்கம்!

கோடிகளில் உருவாக்கப்பட்ட சொர்க்கம்!


PUBLISHED ON : ஏப் 28, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூர தேசங் களுக்கு, சாதாரண வகுப்பில், நீண்ட தூரம் பயணிப்போரின் அவஸ்தையை சொல்லவே வேண்டாம். 'எப்போது தான், நாம் செல்ல வேண்டிய இடம் வருமோ...' என, விரக்தியின் உச்சத்துக்கே சென்று விடுவர்.

பல லட்சம் கோடி ரூபாய்களை, வங்கி கணக்கில் கொட்டி வைத்திருக்கும், கோடீஸ்வரர்கள், இந்த விஷயத்தில், சற்று மாற்றி யோசிக்க துவங்கினர். சவுதி அரேபியா இளவரசர் அல்-வலீத் பின் தலால், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், அமெரிக்காவில் புகழ் பெற்ற தொழில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர், இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள், தாங்களின் விமானப் பயணம், இனிதாகவும், சொகுசாகவும் அமைவதற்காக, பல கோடி ரூபாயில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை வாங்கியுள்ளனர். அதிலும், சவுதி இளவரசர் தான், இதுபோன்ற சொகுசு விமானங்களை, அதிக அளவில் வைத்துள்ளார்.

அவரின் விமானத்துக்குள் நுழைந்தாலே, சொர்க்கத்துக்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும். நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய, பிரமாண்ட டைனிங் ஹால், வரவேற்பறை, கருத்தரங்குகள், மாநாடுகள் நடப்பதற்கான எழில் கொஞ்சும் அறை என, ஒரு மினி அரண்மனை போல் காட்சியளிக்கிறது.

மாநாட்டு அறையில், இளவரசர் அமர்வதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிம்மாசனமும் அதைச் சுற்றி, விருந்தினர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் உள்ளன. சவுதி இளவரசர் அளவுக்கு இல்லாவிட்டாலும், அதில் ஓரளவு வசதிகளுடைய, பிரத்யேகமான சொகுசு விமானத்தை, நடிகர் ஜாக்கி சானும் வைத்துள்ளார்.

இவரின் விமானத்தில், 14 பேர் பயணிக்கலாம். ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ள, அனைத்து வசதிகளும், இந்த விமானத்தில் உள்ளன. சில நேரங்களில், படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கும், இந்த விமானத்தை எடுத்துச் செல்கிறார், ஜாக்கி சான்.

அமெரிக்காவில் பிரபலமான தொழில் அதிபரும், ட்ரம்ப் என்ற அமைப்பின் தலைவருமான, டொனால்டு ட்ரம்ப்பும், தனக்கென, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, ஜெட் விமானத்தை வைத்துள்ளார்.

இவரின் விமானத்தில், அதி நவீன தொழில் நுட்ப வசதிகளை <உடைய, சினிமா தியேட்டர் உள்ளது. ட்ரம்ப், விமானத்தில் செல்லும்போது, இந்த சினிமா தியேட்டரில் தான், பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்.

மார்பிள் பதிக்கப்பட்ட குளியல் அறை, முற்றிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சமையல் அறை, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஓய்வறை என, பறக்கும் சொர்க்கமாக காட்சியளிக்கிறது, இவரது விமானம்.

தனக்கு நெருக்கமான, தொழில் அதிபர்களுடன், தொழில் குறித்த விஷயங்களை பேச வேண்டியிருந்தால், அவர்களை இந்த விமானத்துக்கு அழைத்து வந்து தான், பேசுகிறார் டொனால்டு. இவர்களை தவிர, இன்னும் சில கோடீஸ்வரர்களும், இதுபோன்ற விமானங்களை வைத்துள்ளதாக பேசப்பட்டாலும், அவர்களை பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஏன், நம்ம ஊரைச் சேர்ந்த அரசியல்வாதிகளே, வருமான வரித் துறைக்கு பயந்து, யாருக்கும் தெரியாமல், வெளிநாடுகளில் விமானம் வைத்திருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

***

சி.எஸ்.சஞ்சனா






      Dinamalar
      Follow us