PUBLISHED ON : ஜூலை 05, 2020

தென் கிழக்காசிய நாடான, வியட்நாமின் ஹனோய் நகரில், 'கோல்டன் லேக்' என்ற, ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் முழுவதும், தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஓட்டல் அறைகளில் உள்ள குளியல் அறை, நாற்காலி ஆகியவையும், 24 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளனவாம். சுற்றுலா பயணியரை கவருவதற்காக, இந்த தங்க ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்டின், துபாய் நகரில், 'புர்ஜ் அல் அரபு' என்ற ஓட்டலின், சில பகுதிகள் மட்டும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை மிஞ்சும் வகையில், வியட்நாம் ஓட்டலின், 90 சதவீத பகுதிகள், தங்கத்தால் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் முழுதும் முடிந்ததும், இதில் தங்குவதற்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்ற விபரம் தெரிய வரும்.
— ஜோல்னாபையன்