தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கணவருக்கு மனைவியின் திருமணப் பரிசு கிட்னி!

கணவருக்கு மனைவியின் திருமணப் பரிசு கிட்னி!

கணவருக்கு மனைவியின் திருமணப் பரிசு கிட்னி!


PUBLISHED ON : செப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டனை சேர்ந்தவர், லீ. இவர், லிசா பார்சன் என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். லீக்கு, அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்ததில், லீயின், ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அடுத்த சில நாட்களில், அவரின் மற்றொரு சிறுநீரகமும் செயல் இழந்தது.

'யாராவது, சிறுநீரகம் தானம் தந்தால் மட்டுமே, அவரால் உயிர் பிழைக்க முடியும்...' என, டாக்டர்கள் கூறி விட்டனர். இந்த ஆபத்திலிருந்து, தன் கணவரை காக்க முன்வந்தார். அவரின் காதல் மனைவி, லிசா. தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை, கணவருக்கு தருவதாக, அவர் கூறியுள்ளார். லிசா கூறுகையில்,'எங்களின் திருமண நாள், விரைவில் வரவுள்ளது. அன்று, எங்கள் திருமண பரிசாக, என் காதல் கணவருக்கு, என் சிறுநீரகத்தை பரிசளிக்க போகிறேன்...' என்கிறார். 'இந்த காலத்தில், அதுவும் பிரிட்டனில், இப்படி ஒரு பெண்ணா!' என, அனைவரும், ஆச்சரியப்படுகின்றனர்.

ஜோல்னா பையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us