PUBLISHED ON : செப் 08, 2013

அ நிறம் | அளவு
இந்த படத்தைப் பாருங்கள்... 'என்டோசல்பான்' என்ற பூச்சிக் கொல்லி மருந்தின் தாக்குதலால், பாதிக்கப்பட்டவன் தான் இந்த சிறுவனும், நாய்க் குட்டியும். கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில், அதிக அளவில் முந்திரி தோப்புகள் உள்ளன. பூச்சி தாக்குதல் இல்லாமல், நல்ல விளைச்சல் பெறுவதற்காக, 'என்டோசல்பான்' பூச்சி மருந்தை கருவேப்பிலையிலும் பயன்படுத்துகின்றனர். இது, செடிகளுக்கு நல்லது செய்தாலும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பாதிப்பால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்கள் ஏராளம். நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருப்போர் அதை விட ஏராளம். பல நாடுகளில், தடை செய்யப்பட்டுள்ள இந்த பூச்சிக் கொல்லி மருந்தை, தடை செய்ய மத்திய அரசு, ஏனோ தயங்குகிறது.
— ஜோல்னா பையன்.
