தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆடுகளை குஷிப்படுத்த ஆடம்பர ஓட்டல்!

ஆடுகளை குஷிப்படுத்த ஆடம்பர ஓட்டல்!

ஆடுகளை குஷிப்படுத்த ஆடம்பர ஓட்டல்!


PUBLISHED ON : மே 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாய், பூனை ஆகியவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நடைமுறை, மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாமல், நம் நாட்டிலும் அதிகரித்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கென, தனியாக தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவை உள்ளன. ஜப்பானிலும், இதுபோன்ற விநோதமான கலாசாரம் உருவாகியுள்ளது. ஆனால், அங்கு நாய், பூனை ஆகியவற்றுக்கு பதிலாக, ஆடுகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர். ஜப்பானை பொறுத்தவரை, ஆடுகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்போர், சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்துடன் உள்ளவர்களாக மதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற ஆடம்பரவாசிகளின் ஆடுகளை தங்க வைப்பதற்காகவே, யுகாவாரா என்ற இடத்தில், சொகுசு ஓட்டல் ஒன்று, சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆடுகளுக்கு மட்டுமே இங்கு அனுமதி. மற்ற எந்த செல்லப் பிராணிகளையும் அனுமதிப்பது இல்லை. ஆடுகள் தங்குவதற்காக, குளு குளு வசதியுடன் கூடிய, 30 சொகுசு அறைகள் இங்கு உள்ளன. ஆடம்பர படுக்கை, ஆடுகளை பராமரிப்பதற்கான பணிப்பெண்கள் என, அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. கோடீஸ்வர ஜப்பானியர்கள், தங்கள் ஆடுகளை, ஒரு நாளாவது இங்கு தங்க வைக்க வேண்டும் என, விரும்புகின்றனர். கொடுத்து வைத்த ஆடுகள்!

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us