தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான், நானாக இல்லை!

* நாளைக்கென

மிச்சம் மீதி வைக்காமல்

இன்றே செலவு செய்து

தீர்க்கிறேன்...

சேமிப்பில் இருக்கும் செய்திகளை

உன்னிடம் பேசும் போது

ஒரு ஊதாரியைப் போல!

* நமக்கு நடுவே ஏற்படும்

சிறு சிறு பிரிவு இடைவெளிகளை

பார்க்கிறேன்...

மலைப்பிரதேச பயணங்களின் போது

தென்படும்

பள்ளத்தாக்குகளைப் போல!

* காற்றில் அசைந்து வந்து

என் மீது உன் முந்தானை

உரசும் போதெல்லாம்

லயிக்கிறேன்

கோடைமழையின் தீண்டலின் போது

சிலேகிக்கும் ஒரு செடியைப் போல!

* உன் பார்வைத் தீண்டல்கள்

நிகழும் போதெல்லாம்

குதூகலித்து குதிக்கிறேன்

தென்றல் மோதும் போது

அசையும் கொடி மலரைப் போல!

* உன்னைப் பற்றி

யாரிடமேனும் பேசும் போதெல்லாம்

சலிக்காமல் பேசி

பினாத்துகிறேன்

ஒரு பைத்தியக்காரனைப் போல!

* உன்னிடமிருந்து

விடைபெறும் போதெல்லாம்

மனசு உடைகிறேன்...

கோடை விடுமுறை முடிந்து

முதல்நாள் பள்ளிக்குச் செல்லும்

சிறுவனைப் போல!

— வீ. விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us