/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நாலாயிரம் கோடியில் ஒரு சொகுசு கப்பல்!
/
நாலாயிரம் கோடியில் ஒரு சொகுசு கப்பல்!
PUBLISHED ON : ஜூன் 30, 2013

ஜெர்மன் கப்பல் கட்டும் நிறுவனமான லழ்சன் யோட்டஸ், 'அசம்' என்ற மிகப் பெரிய ஆடம்பர கப்பல் ஒன்றை, உருவாக்கி உள்ளது. அரபு மொழியில், 'அசம்' என்றால், உறுதி என்று பொருள். இதன் தயாரிப்புக்கு, நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. இதில், ஒரு ஆண்டு வடிவமைப்புக்கு மட்டுமே தேவைப்பட்டது. 590 அடி நீளமும், 12 டபுள் டக்கர் பஸ்களின் உயரமும் உள்ள, இக்கப்பலை தயாரிக்க நாலாயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதன் வேகம், 34.5 நாட்டிக்கல் மைல். அதாவது, 55 கி.மீ., உலக சுற்றுலா பயணிகளை கவருவதற்கான அனைத்து அம்சங்களும், 'அசம்' கப்பலில் இருக்கின்றன. இதன் உரிமையாளர் யார் என்பதை பற்றி ரகசியமாக வைத்துள்ளனர். இக்கப்பலுக்கு, அரபு பெயர் சூட்டி இருப்பதால், இது யாராவது அரபு கோடீசுவரருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
— ஜோல்னா பையன்.