
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதலோடு வாழ்வோம்!
* ஒரு மலர் விட்டு
மறு மலர் தாவும்
பட்டாம் பூச்சியாய்
பறப்பது
என்ன மனம்?
* கள்ளூறும் மலராய்
கன்னி நீ இருக்க
காகித மலரைச்
சூடுவதில்
ஏது மணம்?
* கங்கை நதியாய்
காதலி நீ இருக்க
கானல் நீரை
தேடுவதில்
என்ன சுகம்?
* உனக்கான பாடல்
வடித்து இருக்க
ஊருக்காக அதைப்
பாடுவதில்
என்ன பயன்?
* உன்னிடம் கொடுக்க
எழுதிய கவிதையை
வேறு பெண்ணிடம்
படிக்க எண்ணுவது
என்ன மனம்?
* உன்னோடு வாழ
முடியாமல் போனால்
உன் நினைவோடு
உலகில் வாழ்வேன்!
* துணையாக நீ
வராது போனால்
தனியாக நான்
பயணம் செல்வேன்!
* ஒன்றைப் பிரிந்து
வீழ்வதை விட
காதல் உள்ளதென
கருதுவதே சுகம்!
* காதலால் சிலரது
இதயம் பாதிக்கலாம்
கடந்து விட்டால்
எதையும் சாதிக்கலாம்!
— பா.கபிலன், சென்னை.