தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பர்மா என்னும் மியான்மரில் ஒரு திங்கள் ! - கோ.வேணுகோபாலன்

பர்மா என்னும் மியான்மரில் ஒரு திங்கள் ! - கோ.வேணுகோபாலன்

பர்மா என்னும் மியான்மரில் ஒரு திங்கள் ! - கோ.வேணுகோபாலன்


PUBLISHED ON : ஜூலை 04, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகில இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசிய கவுன்சில் உறுப்பினரும், ரெப்கோ வங்கியின் முன் னாள் இயக்குனரும், அகவை முதிர்ந்த தமிழறிஞராக, தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவரு மான கவிஞர் கோ.வேணு கோபாலன், சமீபத்தில், மியான்மர் நாட்டின் தலைநகர் யாங்கோனுக்கு சென்று, அங்கு வாழும் தமிழர் களுக்கு, தமிழ் இலக்கணம், யாப்பிலக்கண வகுப்புகளை நடத் தியுள்ளார். அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

மியான்மரில் வாழும் 10 லட்சம் தமிழ் மக்கள் நலன் பேணும் அமைப்பான, அகில மியான்மர் தமிழ் இந்து

மாமன்றத்தின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் தலைநகரான யாங்கோன் சென்றிருந்தேன்.

தமிழ்நாட்டிற்கு நேர் கிழக்கே, ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய நாடு மியான்மர். பர்மா எனும் பழங்காலப் பெயரை, ராணுவ

ஆட்சி வந்த பிறகு, மியான்மர் என்றும், தலைநகர் ரங்கூனை, யாங்கோன் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

பழைய தலைநகரான ரங்கூனிலிருந்து 250 கி.மீ., தூரத்தில், "நேபிடோ' என்ற புதிய நகரை அமைத்து, ஆட்சி நடந்து வருகிறது. சீனியர் ஜெனரல் தான்சுவே ஆட்சித் தலைவராகவும், ஜெனரல் தெயின்செயின் பிரதமராகவும் உள்ளனர்.

சில நூற்றாண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களால் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்கள், மியான்மர் முழுவதும் பரவி, பலர் விவசாயத்திலும், சிலர் தொழில், வணிகம், கட்டுமானப் பணிகளிலும்  ஈடுபட்டு வருகின்றனர். 1964ல் தாய்நாடு திரும்பிய மூன்று லட்சம் தமிழ் மக்கள் போக, இப்போது மியான்மரில் 10 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பர்மிய - ஆங்கிலம் இரண்டைத் தவிர, மற்ற இன மக்கள் அவரவர் தாய்மொழியில் கல்வி பயிலும் வாய்ப்புகள் இல்லை. தமிழர்களின் பிள்ளைகள் எல்லாம் பர்மிய மொழிப் பள்ளிகளில் பயில்வதால், வீட்டில் தமிழில் பேசுவதில்லை. அந்தப் பிள்ளைகளுக்காக அவர்களின் பெற்றோரும் பர்மிய மொழியிலேயே உரையாடுகின்றனர்.

தமிழ்த் தொலைக் காட்சிகள் அனைத்தும் மியான்மரில் தெளிவாகத் தெரிகின்றன. தமிழ்க் குழந்தைகள், தமிழ்த் தொலைக்காட்சிகள் வாயிலாக, ஓரளவு தமிழை அறிந்து கொள்கின்றனர்; இருந்தாலும், தமிழறிவு அந்த அளவு நிறைவு தருவதாக இல்லை.

தமிழ் மாணவர்கள், பர்மிய - ஆங்கில வழிக் கல்வி பயின்று, டாக்டராகவும், இன்ஜினியராகவும், வழக்கறிஞர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந்தத் தலைமுறையோடு, தமிழ் மொழி, மியான்மர் தமிழர்களை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.

மியான்மர் வாழ் தமிழர்கள், தமிழ்மொழி, தமிழர் தொல் மரபு, தமிழ்ப் பண்பாடு இவைகளைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். அங்கு தமிழ் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு, தமிழ் நூல்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. தமிழ் நாளிதழ்கள், வார - மாத இதழ்களை, யாங்கோன் இந்தியத் தூதராலயத்திற்குச் சென்று தான் படிக்க முடிகிறது; தமிழ்த் திரைப்படங்களும், திரையிடப்படுவதில்லை.

மியான்மர் முழுவதும் ஐந்தாயிரம் இந்துக் கோவில்களும், தலைநகர் யாங்கோனில் மட்டும் 500 கோவில்களும், வழிபாட்டு நிலையில் இருந்து வருகின்றன. ராணுவ அரசு, சமய வழிபாட்டிற்கு நல்ல ஒத் துழைப்பு தந்து வருகிறது. மியான்மரில் உள்ள அனைத்து இந்து கோவில்களுக்கும், தலைமைக் கோவிலாக யாங்கோனிலிருந்து 30 கி.மீ., தூரத்தில் இருக்கும் பீலிக்கான் எனும் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் போற்றப்படுகிறது. மார்ச் 29ம் தேதி, அந்தக் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திரத் தீமிதி விழாவில், நான் கலந்து கொண்டேன். எனக்கு ஆலயத்தின் சார்பில், சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

ஒரு லட்சம் தமிழர்கள், மியான்மர் நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கலந்து கொண்டனர்.  ஆணும், பெண்ணும் வேல் குத்தி காவடி தூக்கி வந்து, தீ மிதித்து, நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். பொதுத் தொண்டில் பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் மக்களுக்கு மனிதாபிமானமிக்க உதவிகளைச் செய்து வருகின்றன. முப்பது முதல் 70 வயது வரையிலான தமிழ் ஆர்வலர்களுக்கு, தமிழ் இலக்கணமும், யாப்பிலக்கணமும் வகுப்பெடுத்து சொல்லித் தந்தேன். ஒரு பெண் கவிஞர் எழுதிய, "கவித்தமிழ்க் களஞ்சியம்' என்ற தலைப்பிலான கவிதை நூலை வெளியிட்டு, பல தமிழ் அமைப்புகளின் பாராட்டுதலையும் பெற்றேன்.

இவ்வாறு தன் அனுபவங்களை கூறினார் கோ.வேணுகோபாலன்.

தொலைபேசி : 044-25520866,  98407 49965.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us