தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதை

கவிதை

கவிதை


PUBLISHED ON : ஜூலை 04, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்களும்  வேண்டாம்





*காதலுக்கு கண்ணில்லை

என்றவன் மூடன்...

உடல், பொருள், ஆவியென

முழுதாய் உன்னைச் சரணடைந்த பின்

பார்வை என்று ஒன்று மட்டும்

எனக்கெதற்கு?



*நான் அறியா வண்ணம்

நீ என் கண்கள் மூடிய பொழுதில்

இவ்வுலகம் தன் கண்கள் மூடி

இருள் கொண்ட தென்பது இதுவரை

நீ அறியா ஒன்று!



*உலகின் கண்களால்

நீ வேறு

நான் வேறு

எனப் பிரித்தறியப்பட்டாலும்

இருவரும் ஒன்றென அறியும்

நம் காதலின் கண்கள் மட்டும்!



*நான் உனக்கு பரிசளித்த

பூக்களின் நிறமும், மணமும்

மட்டுமே அறிய முயற்சிக்கும் - இவ்வுலகம்

அதில் ஒளிந்து கிடக்கும்

என் காதலை அறிய முற்படாததன்

ரகசியம் இன்னும் புரியவில்லை எனக்கு!



*உன் நடையின் சப்தம்

மவுனத்தின் நிசப்தம்

இவை யாவும் கூட

நம் காதலின் சங்கேத பாஷைகள் தாம்...

இவ்வுலகறியா புதிர்களில் இவைகளுமொன்று!



*காதலர் தின நாளொன்றில்

பரிசாய் நீ அளித்து சென்ற

கைக்கடிகாரம் கூட

முட்கள் அற்ற மலராய்த்தான்

தோன்றுகிறது என் காதலின் கண்களுக்கு!



*என் கண்கள் இரண்டையும்

நீ குத்தகைக்கு கொள்ள தயாரென்றால்

தூக்கம் கூட வேண்டாம்...

கனவுகள் மட்டும்

போதுமெனக்கு!



*மிக அரிதாய்

நாம் பிரிந்த வேளைகளில் கூட

நம் காதலை மெய்ப்பித்தது

கடிதங்கள் மட்டுமல்ல

கனவுகளும் கூடத்தான்!



*கண்கள் என்ற ஒன்று

இருந்தால் தான்

கனவுகள் வரும் என்பதில்லை...

காதல் மட்டும்

இருந்தால் போதும்

கனவுகளை பொறுத்தவரை!  — பி.மாயா, இடைகால்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us