
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்டை நாடான சீனாவின் புஜியான் மாகாணத்தில், மலையடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம், டிங் உலிங். பச்சை பசேல் என, காட்சி அளிக்கும் இந்த கிராமத்தில், கொசுவே இல்லை. தேரை வடிவில் இருக்கும் கல்லை, கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர், இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள்.
இந்த தேரையை வழிபடுவதால், கொசுத் தொல்லை இல்லாமல் இருப்பதாக, இவர்கள் கூறுகின்றனர். கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களோ, 'இங்கு சேரும் குப்பைகளை எல்லாம், மலை அடிவாரத்தில் ஆழமாக பள்ளம் தோண்டி, அதில், புதைத்து விடுவோம். அதனால் தான், எங்கள் ஊரில் கொசுத் தொல்லை இல்லை...' என்கின்றனர்.
இதைக் கேள்விப்பட்டு, சீனாவின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள், கொசு இல்லா கிராமத்தை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
ஜோல்னாபையன்