PUBLISHED ON : ஜூலை 12, 2020

தென் கிழக்காசிய நாடான, தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள, சோன் டேவ் என்ற நகரைச் சேர்ந்தவர், கணிதா, 40, என்ற பெண். இவர், பணம் சம்பாதிப்பதற்காக செய்யும் வேலையை கேள்விப்பட்டால், ஆச்சரியப்படுவீர்கள்.
இறந்தவர்கள், அவர்கள் உயிருடன் இருந்தபோது பயன்படுத்திய உடைகளை தேடிப்பிடித்து வாங்கி வருகிறார். பேய் போல வேடமிட்டு, கேமரா முன் அமர்ந்து, ஒவ்வொரு உடையாக காட்டி, 'ஆன்லைனில்' விற்பனை செய்வது தான், இவரது வேலை.
இந்த உடைகளையும், ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து வாங்குவதற்கு, முட்டி மோதுகின்றனர், மக்கள். இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கணிதா, அவர்களது உடைகளை இலவசமாக வாங்கி வருகிறார். அவற்றுக்கு புது மெருகேற்றி, இஷ்டம் போல விலை வைத்து, விற்பனை செய்து சம்பாதிக்கிறார்.
'இறந்தவர்களின் உடைகளை யார் வாங்குகின்றனர்...' என, கேட்டால், 'என்னைப் போல், லுாசுப் பெண்கள், ஆண்கள், இங்கு நிறைய உள்ளனர்...' என, கிண்டலாக சிரிக்கிறார்.
—ஜோல்னாபையன்