தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அளவுக்கு அதிகமாக சிரித்தால்...

அளவுக்கு அதிகமாக சிரித்தால்...

அளவுக்கு அதிகமாக சிரித்தால்...


PUBLISHED ON : ஜூலை 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் அண்டை நாடான சீனாவில், கோங்ஜோ என்ற நகரிலிருந்து புறப்பட்ட ரயிலில் பயணித்த ஒரு இளம் பெண், சக பயணியருடன் ஜாலியாக பேசிக் கொண்டே வந்தார். பயணி ஒருவர் நகைச்சுவையாக பேசியதால், சிரிப்பை அடக்க முடியாமல், வாயை அகலமாக திறந்து, பலமாக சிரித்தார்.

சிறிது நேரத்தில் சிரிப்பை அடக்கிய அவரால், அகலமாக திறந்த வாயை மூட முடியவில்லை. அருகில் உள்ள பயணியர், எவ்வளவோ முயன்றும், அவரது வாயை மூட முடியவில்லை.

அடுத்த பெட்டியில் இருந்த, லுயோ வென்ஜெங் என்ற டாக்டரை தேடிப்பிடித்து அழைத்து வந்தனர். அந்த பெண்ணை பரிசோதித்தவர், பக்கவாதம் போன்ற சிறிய பாதிப்பு காரணமாக, அவரது வாயை மூட முடியாததையும், அளவுக்கு அதிகமாக சிரித்ததால், தாடை சற்று இடம் மாறியதையும் கண்டுபிடித்தார்.

நீண்ட நேரம் கடுமையாக முயற்சி செய்து, அந்த பெண்ணின் தாடையை சரி செய்தார். இயல்பான நிலைக்கு திரும்பிய அந்த பெண்ணும், சக பயணியரும், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us