PUBLISHED ON : ஜன 03, 2016

அ நிறம் | அளவு
கேரளாவில் உள்ள சுல்தான் பெத்தேரி, எச்.எஸ்.எஸ்.பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அபிஜித் மற்றும் முகமது ஆஷிக் என்ற மாணவர்கள், புது விதமான மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் தயாரித்துள்ள, 'சுசூக்கி மாக்ஸ் 100' என்ற இந்த பைக்கில், ஐந்து டேங்குகள் அமைந்துள்ளன. அவற்றில், பெட்ரோல், டீசல், தண்ணீர், கால்சியம் கார்பைட் மற்றும் சிக்கன் வறுத்த பின் மீதமான எண்ணை ஆகியவற்றை நிரப்பி, அதன்மூலம் பைக்கை பல கி.மீ., தூரத்துக்கு ஓட்டி காட்டினர்.
அத்துடன், பழங்களை பழுக்க வைக்க பயன்படும் கார்பைட் கற்களை தண்ணீரில் கரைத்து, அதை எரிபொருளாக பயன்படுத்தி உள்ளனர்.
இதுபோன்ற தொழில் நுட்பங்களை ஊக்குவித்தால், அரபு நாடுகளிடம் பெட்ரோலுக்கு கையேந்த வேண்டாம் அல்லவா!
— ஜோல்னாபையன்.
