PUBLISHED ON : ஜூன் 26, 2022

அ நிறம் | அளவு
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, எகிப்தில், நைல் நதிக்கரை ஓரம் வசிக்கும், நுபியன் என்ற பழங்குடி இன மக்கள், முதலைகளை தங்கள் செல்ல பிராணியாக வளர்க்கின்றனர்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதலையிடம் பிரியமாக உள்ளனர். குட்டியிலிருந்து வளர்த்து வருவதால், வீட்டு உறுப்பினர்களை அது எதுவும் செய்வதில்லையாம். நாய் குட்டியிடம் விளையாடுவது போல், முதலைகளிடம் கொஞ்சி விளையாடுகின்றனர்.
கடந்த, 1953ம் ஆண்டுக்கு முன்பு வரை, நுபியன் இன மக்கள், தங்களுக்குரிய குல தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின், குல தெய்வ வழிபாட்டில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இன்று, அவர்களில் பெரும்பாலானோர், இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டனர். ஆனாலும், முதலை வளர்ப்பதை விடவில்லை.
— ஜோல்னாபையன்
