PUBLISHED ON : ஏப் 02, 2017

அ நிறம் | அளவு
உன் பெயரையே விரும்புகிறேன்
என்னை குளிர்வித்தல் பொருட்டு
நேற்றிரவு கனமழையை
நீ தான் அனுப்பி வைத்தாயா?
நான் மலர்தல் வேண்டி
செடிகளில் குலுங்கும்
பூக்களுக்கு சிரிப்பை
நீ தான் அள்ளி வீசினாயா?
நிலவு எனக்கு பிடிக்கும் என்பதால் தான்
அதன் காலடியில்
நட்சத்திர முத்தங்களை
அடுக்கி வைத்திருக்கிறாயா?
இருள் கண்டு பயம் கொள்ளும்
குழந்தை நானென உணர்ந்து தான்
ஊர்தோறும் கோவில் எழுப்பி
என்னை பாதுகாக்கிறாயா?
போதும் போதும்...
மழையாய், பூவாய், நிலவாய்
அறிவதை விடவும்
உன்னை
உன் பெயரிலேயே
உணர விரும்புகிறேன்!
— இ.எஸ்.லலிதாமதி, சென்னை
