PUBLISHED ON : அக் 01, 2023

அ நிறம் | அளவு
படத்தில் காணப்படுவது, தபால் நிலையம் என்றால் நம்ப முடிகிறதா?
அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், கொமிக் என்ற ஒரு மலைப்பிரதேச கிராமம் இருக்கிறது. இங்குள்ள ஹிக்கிமில் இருக்கும் இந்த தபால் நிலையம், கடல் மட்டத்திலிருந்து, 13 ஆயிரத்து 668 அடி உயரத்தில் இருக்கிறது.
சுற்றுலா காலங்களில், தபால் நிலையத்தில் விற்பனை சூடு பிடித்து விடும். திபெத்தின் அழகிய காட்சிகளை புகைப்படம் எடுத்து, அவைகளை கார்டுகளில் அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். சுற்றுலா பயணியர் வாங்கி, தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புவர்.
இதனால், சீசனின் போது, பல லட்சம் வருமானம் கிடைக்கிறதாம். 1983ல் நிறுவப்பட்டது, இந்த தபால் நிலையம். கடும் குளிர் காலத்தில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவதால், வியாபாரமும் மந்தமாகி விடும்.
— ஜோல்னாபையன்
