PUBLISHED ON : அக் 01, 2023

அ நிறம் | அளவு
ராணுவம் மற்றும் காவல்துறை போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது, நாய்கள் படை.
பெங்களூருவில் தராலு என்ற இடத்தில், மத்திய போலீஸ் படைக்கு உதவும் சிறப்பு நாய்கள் படை பயிற்சி மையம் இருக்கிறது. இங்கு சிறப்பு பயிற்சி பெற்ற, 135 நாய்கள் இருக்கின்றன.
நாய்கள் பிறந்து, இரண்டு மாதங்களிலிருந்து பயிற்சி ஆரம்பமாகிறது. 90 நாட்களில் மிகவும் சக்தி வாய்ந்த நாய் படை உருவாகி விடும். குற்றவாளிகளை பிடிப்பதிலும், வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பதிலும் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள், நம் பாதுகாப்பு படைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
பெல்ஜியம் ஷெபேர்டு மற்றும் ஜெர்மன் ஷெபேர்டு இன நாய்கள் தான் இங்குள்ளன. தீவிரவாதி ஒசாமா பின்லாடன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில், பெல்ஜியம் ஷெபேர்டு செய்த சேவை மகத்தானது.
ஜோல்னாபையன்
