PUBLISHED ON : அக் 01, 2023

பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான, பப்பாளி, மருத்துவ குணங்கள் கொண்டது
*பப்பாளி பழத்தை தேனில் தொட்டு சாப்பிட்டு வர, தாய்ப்பால் தாராளமாக சுரக்கும்
*மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களை விட, பப்பாளி பழம் அருமையான மருந்து. இதை தவறாமல், தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் வரவே வராது.
* அதுபோல், உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள், தினம் பப்பாளிக்காயை உணவில் சேர்த்து வர, சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியாக துர் நீர் வெளியேறும்
* பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வர, பித்த சம்பந்தமான நோய்கள் குறையும்
* பப்பாளியில் உள்ள வைட்டமின் சத்து, குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது
* சிறுநீர் பாதையில் கல் அடைப்பு உள்ளவர்கள், பப்பாளி பழம் சாப்பிட்டு வர, கல் கரைந்து விடும்
* அல்சர் தொல்லை உள்ளோர், பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் பெறலாம்
* மாலைக்கண் நோயின் அறிகுறி தென்படும்போதே, பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் வராது
* குழந்தைகள் அடிக்கடி பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால், அவர்கள் அழகும், ஆரோக்கியமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாக வளர்வர். பப்பாளியில் உள்ள, 'பேராக்ஸ் நேஸ்' என்ற தாது பொருள், உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.
தொகுப்பு: எஸ்.ஆர்.ஹரிகரன்
