தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விலை மதிக்க முடியாத அலங்கார மீன்!

விலை மதிக்க முடியாத அலங்கார மீன்!

விலை மதிக்க முடியாத அலங்கார மீன்!


PUBLISHED ON : மே 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு, சாம்ராஜ் பேட்டையில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வருபவர் உமேஷ் கவுடா. இவரிடம், அபூர்வ வாஸ்து மீன் ஒன்று உள்ளது. 'எத்தனை லட்சம் ரூபாய் கொடுத்தாலும், இந்த மீனை விற்க மாட்டேன்...' என்கிறார் உமேஷ்.

அந்த மீனில், அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? அந்த மீனின் உடலில் உள்ள கோடுகள், அரபு மொழியில், 'அல்லா' என பொருள் படும் வகையில் காணப்படுகிறதாம். உமேஷின் இஸ்லாமிய நண்பர்கள் தான் இவ்வாறு கூறியுள்ளனர். அதன் பின், இந்த மீனின் மதிப்பு பல மடங்கு கூடி விட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், உமேஷ் இந்த மீனை, 3,000 ரூபாய் கொடுத்து வாங்கினார். அப்போது, இந்த மீனின் உடலில் எந்த எழுத்து குறிகளும் காணப்படவில்லை. மீன் நன்றாக வளர்ந்த பின், அதன் உடலில் சில கோடுகள் தெரிய ஆரம்பித்தன. இப்போது, அந்த கோடுகள் தான், மீனின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி விட்டது.

இந்த மீனை, இரண்டு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க, கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் முன் வந்தார். ஆனால், அந்த மீனை விற்க மறுத்து விட்டார் உமேஷ். ஏப்ரல் மாதம், உமேஷின் உடற்பயிற்சி மையத்தில் உள்ள மீன் காட்சியகத்தில் இருந்த இந்த மீன், திடீரென காணாமல் போய் விட்டது; உடனே, பெங்களூரு போலிசில் புகார் கூறினார். உடற்பயிற்சி கூடத்தை மூடி விட்டு, பெங்களூரு நகரில் மீன்களை விற்பனை செய்யும் காட்சியகங்களுக்கெல்லாம் சென்று பார்வையிட்டார்; துப்பு கிடைத்தது. பெங்களூரு, ஸ்ரீநகர் பகுதியிலுள்ள மீன் காட்சியகத்தில், மீன் ஒன்று, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கே, மீன் வாங்கச் சென்றவர் போல் சென்று, அந்த மீனைப் பார்த்தார். அது, தன் மீன் தான் என தெரிந்த உடன், போலீஸ் துணையுடன் அதை நிரூபித்தார். அந்த மீன் காட்சியக உரிமை யாளரும், எந்த எதிர்ப்பும் தெரிவிக் காமல், மீனை திருப்பி கொடுத்தார்.

தன் அதிர்ஷ்ட மீன் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் இப்போது தன் உடற்பயிற்சி கூடத்தை திறந்து விட்டார் உமேஷ். 'இந்த மீன் என் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த பின் தான், எனக்கு அதிர்ஷ்டம் வந்தது. நிறைய வாடிக்கையாளர்கள் வந்தனர்; வியாபாரம் பெருகியது. எனவே, எத்தனை லட்சம் ரூபாய் கொடுத்தாலும், இந்த மீனை விற்க மாட்டேன்...' என்கிறார்.

***

- ஜி.எஸ்.ஆனந்த கண்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us