தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/லண்டன் குழந்தையை காப்பாற்றிய இந்திய டாக்டர்!

லண்டன் குழந்தையை காப்பாற்றிய இந்திய டாக்டர்!

லண்டன் குழந்தையை காப்பாற்றிய இந்திய டாக்டர்!


PUBLISHED ON : மே 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருமல், மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு என்ன பிரச்னை என கண்டுபிடிக்க முடியாமல், லண்டன் நகரில் உள்ள மூன்று பிரபல டாக்டர்கள் திணறினர்; ஆனால், பார்த்த உடனேயே, அந்த குழந்தையின் குரல்வளையில் ரப்பர் சிக்கியிருப்பதை கண்டுபிடித்து, குழந்தையைக் காப்பாற்றினார் ஒரு இந்திய டாக்டர்.

புனே நகரில் சமீபத்தில் இந்த சம்பவம் நடந்தது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் இந்த குழந்தையின் பெயர் ரபேல் பாய்ன்டன். இரண்டே வயதான இந்த ஆண் குழந்தை, சில நாட்களாக கடும் மூச்சுத் திணறல், இருமலால் அவதிப்பட்டு வந்தது.

லண்டனில், குழந்தைகள் நல டாக்டர் ஒருவரிடம், ரபேலை அழைத்துச் சென்றனர் பெற்றோர். ரபேலை பரிசோதித்த டாக்டர், சுவாச பாதையில் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கும் என கணித்து, அதற்கு ஏற்றபடி நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கினார். அந்த மருந்துகளை சாப்பிட்ட பின்பும், ரபேலுக்கு மூச்சுத் திணறல் ஓயவில்லை. லண்டனில் மேலும், இரண்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் குழந்தையை அழைத்துச் சென்றனர்; அவர்கள் கொடுத்த சிகிச்சைக்கும் எந்த பலனும் இல்லை.

அலுவலக வேலையை முன்னிட்டு, இந்தியாவின் புனே நகருக்கு வந்தார் ரபேலின் தாய் சீரா. அப்போது, தாயுடன் இந்தியா வந்த ரபேலுக்கு மூச்சுத் திணறல் அதிகமானது. உடனே, புனே நகரில் உள்ள ஆதித்யா பிர்லா மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல டாக்டர் சச்சின் ஷா என்பவரிடம், ரபேலை அழைத்துச் சென்று காட்டினர்.

ரபேலை பரிசோதித்த டாக்டர் சச்சின். சில நிமிடங் களிலேயே, மூச்சுக் குழாயில் ஏதோ சிக்கியிருக்கிறது என்பதை கண்டு பிடித்தார். லண்டனில் மூன்று டாக்டர்களுக்கும் வராத சந்தேகம், சச்சினுக்கு வந்தது. ரபேலின் பெற்றோருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ரபேல் குரல்வளையில்,

8 மி.மீ., தடிமன் கொண்ட ரப்பர் துண்டு ஒன்று சிக்கியிருப்பதை கண்டுபிடித்தார் டாக்டர் சச்சின்.

குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டாஸ்மித் சிங்குடன் சேர்ந்து, டாக்டர் சச்சின், ஒரு குழாய் மூலம் அந்த ரப்பரை வெளியே எடுத்தார். இப்போது, குழந்தை ரபேல் நன்றாக மூச்சு விடுகிறது; இருமல் தொல்லையும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியடைந்த தாய் சீரா, இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது...

'லண்டனில் மூன்று டாக்டர்களால் மூச்சுக் குழாயில் ரப்பர் சிக்கி இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை; இது, எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்திய டாக்டர்கள் மிகவும் திறமைசாலிகள்; அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்...' என்று கூறினார்.

'குழந்தை திக்கித் திணறி, மூச்சு விடுவதைப் பார்த்த உடனேயே, குழந்தையின் மூச்சுக் குழாயில் ஏதோ சிக்கி இருக்க வேண்டும் என்று யூகித்தேன்...' என்றார் டாக்டர் சச்சின்.

குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை, இந்த சம்பவம் எல்லா பெற்றோருக்கும் உணர்த்துகிறது.

***

- எம்.ஜோதீஸ்வரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us