/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஆண் வேடமிட்டு பார்க்கு சென்ற இளவரசி!
/
ஆண் வேடமிட்டு பார்க்கு சென்ற இளவரசி!
PUBLISHED ON : மே 05, 2013

பிரிட்டன் இளவரசி டயானா, தன்னுடைய, மனிதாபிமான செயல்களால், உலக மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். கடந்த, 1997ல், பாரீசில் நடந்த கார் விபத்தில், அவர் மரணமடைந்தார். அவருடன் மிக நெருங்கி பழகிய, பிரபல ஹாலிவுட் நடிகை ஷெலோ ரோகாஸ், தன், கடந்த கால நிகழ்வுகளை, 'தி பவர் ஆப் பாசிடிவ் டிரிங்கிங்' என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், இளவரசி டயானாவை பற்றிய, சுவராசியமான சம்பவங்களையும், எழுதியுள்ளார்.
கடந்த, 1988ல், தெற்கு லண்டனில் இருந்த, பிரபலமான இரவு விடுதிக்கு, டயானா செல்ல விரும்பியதாகவும், அதற்காக, டயானாவுக்கு ஆண் வேடமிட்டு, அங்கு அழைத்துச் சென்றதாகவும், ரோகாஸ் அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ஆண்கள் அணிவது போன்ற, மேலங்கியும், கண்களை மறைக்கும் வகையில் கருப்பு கண்ணாடியும், டயானாவுக்கு அணிவித்து, 'பார்'க்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து, ரோகாஸ் கூறுகையில், 'விடுதியில் உள்ளவர்கள், எந்த நேரத்திலும், இளவரசியை அடையாளம் கண்டுபிடித்து விடுவர் என, நினைத்தோம். கடைசிவரை, யாராலும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தான், ஒரு இளவரசி என்பதை மறந்து, அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும், சந்தோஷமாக அனுபவித்தார் டயானா...' என்று, தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் ரோகாஸ்.
— ஜோல்னா பையன்.