sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 05, 2013

Google News

PUBLISHED ON : மே 05, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூடிக் கொள்வதில் சுகம்!

* மனம்

ஒரு மளிகைக் கடை!

உள்ளே

தொங்கும் துலாக்கோலில்

எடைக்கல்லாய் இருப்பது

எதிர்பார்ப்பு!

* விற்பனை செய்யும்

விருப்பத்தோடு காத்திருக்கிறோம்

கடை முழுக்க

கமகமக்கும் கனவுகளோடு!

* சில கடை கனவுகள்

சீக்கிரமாய் விற்றுவிடுகின்றன...

சிலருக்கோ

மாலை விழும்வரை

ஆளே வருவதில்லை!

* வாங்க வருபவர்கள்

கடையை வைத்துத்தான்

பொருளைத் தீர்மானிக்கின்றனர்!

* மளிகைக் கடையில்

உப்பு தொடங்கி

ஊறுகாய் வரை...

எல்லாப் பொருட்களும்

இருக்கவே செய்யும்!

* விற்பனை செய்யும்

பொருட்களை விடவும்

கற்பனை கொஞ்சம்

அதிகமாய் இருந்தால்

கனவுகளைக் கூட

காலி செய்துவிடலாம்!

* பொருளை விற்பவன்

புத்திசாலியாக மட்டும்

இருந்தால் போதாது...

பொறுமைசாலியாகவும்

இருக்க வேண்டும்!

* பொய்மை கலக்காத

பொருட்களை வாங்கவே

பூமியில் எல்லாரும்

பிரியப்படுகின்றனர்!

* கனவுகள் தங்கமல்ல...

விளம்பரம் செய்து

வியாபாரம் செய்ய!

* பூ கடைகளுக்கு

போர்டு தேவையில்லை...

வாடும் பூக்கள்தான் கனவுகள்

என்றாலும்...

சூடிக் கொள்பவர்களுக்கு அதுதானே

சுகம் கொடுக்கிறது!

* கனவுகளில் மென்மையும்

கடையில் உண்மையும்

கலந்து செய்யும் வியாபாரம்

என்றும் களை கட்டும்!

சு.விஜயலட்சுமி, கடம்பூர்.






      Dinamalar
      Follow us