PUBLISHED ON : அக் 15, 2023

அ நிறம் | அளவு
ஒருபக்கம், சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பி, உலக சாதனை ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், வடமாநிலங்கள் பலவும், இன்னும் பழங்கால பழக்க வழக்கத்திலேயே இருக்கின்றன.
படத்தில் காணப்படுவது, ஒரு சாலையோர சலுான். பீகார் மாநிலம், புத்தகயா நகரில் உள்ள இந்த சலுானில், வெள்ளைக்காரர் ஒருவருக்கு, மிக குறைந்த கட்டணத்தில் முடி வெட்டுகிறார், கடைக்காரர்.
'வெறும், 50 ரூபாய் கொடுத்து, வெட்ட வெளியில் உட்கார்ந்து, சாலை காட்சிகளை கண்டு ரசித்தபடி முடி வெட்டிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...' என்கிறார், இந்த வெள்ளையர்.
— ஜோல்னாபையன்
