தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விருட்சமாகும் விதைப் பந்து!

விருட்சமாகும் விதைப் பந்து!

விருட்சமாகும் விதைப் பந்து!


PUBLISHED ON : நவ 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எளிய வழியில், அதிகமாக மரங்கள் வளர்க்க வேண்டுமா... விதைப் பந்து தயார் செய்யுங்க. மிகவும் தொன்மையான, எகிப்திய நாட்டு விவசாய முறை இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பான் நாட்டில், விளைநிலங்களை தவிர்த்து, எரிமலை சாம்பல் படிந்த பகுதியில், விதைப்பந்துகளை, வானிலிருந்து தூவியே, காடுகளை உருவாக்கினர். விதை பந்துகளை தயாரிக்க, தேவையான பொருட்கள்:

* செம்மண் அல்லது களிமண்

* தரமான மரங்களின் விதைகள்

* பசுஞ்சாணம் மற்றும் நீர்

செய்முறை: செம்மண்ணில், பாதியளவு சாணத்தை கலந்து, நீரூற்றி பிசைந்து, அதன் நடுவே, சேகரித்த விதைகளை பொதித்து, உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். முதலில், நிழலில் உலர்த்தி, பின், வெயிலில் ஒருநாள் காய வைக்கவும்.இதனால், உருண்டைகளில் வெடிப்பு வராது; சூரிய வெப்பத்தில், ஒருநாள் காய்ந்தால், அது, இறுகி விடும்.

நீங்கள் வெளியே செல்லும் போது, மரம் நட வாய்ப்புள்ள இடங்களில், இந்த விதை பந்தை வீசி விடவும். மழை வரும் வரை, அவ்விதையை எலி, எறும்பு மற்றும் பறவைகளிடமிருந்து, செம்மண், பசுஞ்சாணக் கலவை பாதுகாக்கும். ஒரு ஆண்டு வரை, இவ்விதை முளைக்க, ஏற்றதாக இருக்கும்.

மண்ணில் கலந்துள்ள சாணமானது, மண்ணில், நுண்ணுயிர்களை உருவாக்கி, செடியின் வேர், மண்ணில் எளிதில் செல்ல, ஏற்ற வகையில், இலகுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை, செடியின் வேர் உண்டு, தன்னை, அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.

ஆனால், வெறும் விதைகளை விதைத்தால், அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம்; வெப்பத்தால், தன் முளைக்கும் தன்மையை விதை இழந்து விடலாம்; நிலமானது, செடி வளர்வதற்கு ஏற்றதாக இல்லாமல், கடினமானதாக இருக்கலாம்; இதனால், விதை முளைக்காது. ஆனால், விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன், இலகுவதுடன், நுண்ணுயிர்களை உண்டாக்கி, நிலத்தை இலகுவாக்கி விடும்.

இயற்கையை நேசிக்கும் மனமும், ஆர்வமும் மற்றும் அதற்கான முயற்சியும் இருந்தால் போதும், விதைப்பந்துகள் தயாரித்து விடலாம். ஐப்பசி அடைமழையை, விதைப் பந்துகளுடன் வரவேற்போம்!

ஜேசுதாசின் முதல் குரு!

படத்தில், பாடகர் ஜேசுதாசுடன் இருப்பவர், அவரது தந்தை அகஸ்டின் ஜோசப். இவர், அக்கால, நாடக நடிகர் மற்றும் பாடகர்.

மகன், தன்னை விட, சிறந்த பாடகர் ஆகி, புகழ் பெற வேண்டும் என்று, நான்கு வயதிலிருந்தே ஜேசுதாசுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார்.

தன் முதல் குருவே, தந்தையாக இருந்ததை நினைத்து, பெருமைப்படுவதாக கூறுகிறார் ஜேசுதாஸ்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us