தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/12 கோடி ரூபாய் செலவில் நடமாடும் சொர்க்கம்!

12 கோடி ரூபாய் செலவில் நடமாடும் சொர்க்கம்!

12 கோடி ரூபாய் செலவில் நடமாடும் சொர்க்கம்!


PUBLISHED ON : செப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பணம் பத்தும் செய்யும்' என்ற பழமொழியை உண்மையாக்கியுள்ளார், பிரபல ஹாலிவுட் நடிகர், அஸ்டன் ஹட்சர். இவர், 'ஜாப்ஸ், தி கார்டியன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து, புகழ் பெற்றவர். அமெரிக்க, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும், சீரியல்களில், இவர் தான், முன்னணி நடிகர்.

இவருக்கு, மற்றொரு கூடுதல் தகுதியும் உண்டு. ஹாலிவுட் நடிகை, டெமி மூரின் மாஜி கணவர். திரைப்படம், 'டிவி' சீரியல்களில் நடிப்பதால், ஹட்சரின் கல்லாப் பெட்டி, எப்போதும் நிரம்பி வழிவது வழக்கம். இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு, சும்மா இருக்கத் தோன்றுமா!

12 கோடி ரூபாய் செலவில், நடமாடும் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார். பிரமாண்டமான டிரெயிலரை உருமாற்றி, மிகப் பெரிய பங்களாவாக்கி யுள்ளார். அஸ்டன் ஹட்சருக்கு தேவைப்படும் இடங்களில் எல்லாம், இந்த நடமாடும் பங்களா நிறுத்தப்படும்.

அஸ்டன் ஹட்சருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பங்களா, 53 அடி நீளமும், 30 டன் எடையும் உடையது. இரண்டு தளங்களை கொண்ட, இந்த பங்களாவில், இரண்டாவது தளம், ஹைட்ராலிக் முறை மூலம், மேலே எழும்பி, விரிவடையும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்படி விரிவடையும்போது, அந்த தளத்தில், 1,100 சதுர அடி இடவசதி கிடைக்கும். இதில், இரண்டு படுக்கை அறை, இரண்டு குளியல் அறை, ஒரு சமையல் அறை, ஹால் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தரை முழுவதும், கிரானைட் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட பங்களாவின் சுவர்கள், நாற்காலிகள், மடங்கி, விரியும் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. பங்களாவுக்கு உள்ளே, ஏழு இடங்களில், 60 அங்குல பிளாஸ்மா, 'டிவி'க்கள் உள்ளன. டிரெயிலரின் வெளிப் புறத்தின் பல இடங்களில், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அஸ்டன் ஹட்சரை, பார்க்க விரும்புவோர், டிரெயிலருக்கு வெளியில், கதவருகே வந்தாலே, அவர்களின் படம், பங்களாவுக்கு உள்ளே உள்ள 'டிவி' திரைகளில் தெரியும். பங்களாவில் உள்ள, ஒவ்வொரு அறையின் கதவும், 'பயோமெட்ரிக்' தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அஸ்டன் ஹட்சரின் கைரேகையை, கதவின் மீது வைத்தால் தான், கதவு திறக்கும். வேறு, யார் வைத்தாலும் திறக்காது. வெளியில் நிலவும்,சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி, பங்களாவுக்கு உள்ளே, குளிர் மற்றும் வெப்ப நிலை நிலவும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அஸ்டன் ஹட்சர், இந்த நடமாடும் பங்களாவுக்கு, 'ஹீட்' என, பெயர் சூட்டியுள்ளார். ஹாலிவுட் முழுவதும், இப்போது, இந்த பங்களாவைப் பற்றித் தான், பரபரப்பாக பேசப்படுகிறது.

இதில், ஒரேயொரு பிரச்னை உண்டு. இந்த டிரெயிலரின் உயரம், 15 அடியாக உள்ளது. ஆனால், அமெரிக்க சாலைகளில், 13 அடிக்கு மேற்பட்ட உயரம் உடைய வாகனங்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளதால், இதன் உயரத்தை குறைப்பது எப்படி என, தீவிரமாக யோசித்து வருகிறார், ஹட்சர்.

***

சி.எஸ். ரித்விக்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us