தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திருக்குறள் பரப்பும் தட்டுவண்டி தொழிலாளி!

திருக்குறள் பரப்பும் தட்டுவண்டி தொழிலாளி!

திருக்குறள் பரப்பும் தட்டுவண்டி தொழிலாளி!


PUBLISHED ON : ஜூன் 10, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளிப் பருவத்தில் நாம் திருக்குறளை படித்திருப்போம். அதன் பிறகு நம்மில் பலர் திருக்குறள் பக்கம் கூட தலை வைத்திருக்க மாட்டோம். அரசியல்வாதிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் விழா மேடைகளில் பேசும்போது, அவ்வப்போது திருக்குறளைக் கூறுவதில் வியப்பேதும் இல்லை. அது, வாடிக்கையான விஷயம்தான்.

புதுச்சேரியில் தட்டு வண்டி ஓட்டும் கூலித் தொழிலாளி ஒருவர், தன் வண்டியின் பின்புறம் தினமும் ஒரு திருக்குறளை எழுதி, உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமைகளைப் பரப்பி வருகிறார். புதுச்சேரி நெல்லித்தோப்பு, பெரியார் நகரில் வசிப்பவர் தாமோதரன், வயது 52. தட்டு வண்டியில் பொருட்களை ஏற்றிச் செல்லும் தொழிலை செய்து வருகிறார். பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார்.

திருக்குறள் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், தினமும் ஒரு திருக்குறளை, தன் தட்டு வண்டியில் பின் பக்கம் அமைத்துள்ள இரும்பு தகட்டில், அனைவருக்கும் தெரியும் வகையில் சாக்பீசால் எழுதி, திருக்குறளின் பெருமைகளை வீதி, வீதியாகப் பரப்பி வருகிறார். எத்தனை வேலைகள் இருந்தாலும், உடல் சுகவீனப்பட்டாலும் ஒரு நாளும் திருக்குறளை எழுதத் தவறுவதில்லை.

'தினம் ஒரு திருக்குறள்' என, இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக எழுதி வருகிறார். திருக்குறளை மட்டும் எழுதாமல், அதற்கான அர்த்தத்தையும் கோடிட்டுக் காட்டி வருகிறார்.

தட்டு வண்டியில் புதுச்சேரி நகரின் பெரும்பாலான சாலைகளில் தினந்தோறும் பயணம் செய்வதால், மக்கள் பலர் வண்டியின் பின்புறம் எழுதப்பட்டுள்ள திருக்குறளைப் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். வழக்கமாக நாம் 'டிவி'யில்தான் ' தினம் ஒரு திருக்குறள் 'நிகழ்ச்சியைப் பார்த்திருப்போம். ஆனால், தாமோதரன் மனதில் எப்படி தினம் ஒரு திருக்குறள் எழுதும் ஆசை வந்தது என அவரிடம் கேட்டபோது, 'ஆட்டோவில் சிலர் ஒரு வரியில் (பிரசவத்திற்கு இலவசம் உள்ளிட்ட வாசகங்கள்) எழுதியிருப்பதைப் பார்த்த போது, நாமும் இதுபோல் தட்டு வண்டியில் வித்தியாசமாக ஏதாவது எழுதினால் என்ன என தோன்றியது.

'திருக்குறளின் பெருமையைப் மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக தினந்தோறும் எழுதி வருகிறேன். தினம் ஒரு திருக்குறள் வீதம் 1330 திருக்குறளையும் எழுதி முடிப்பதற்கு நான்கரை ஆண்டுகள் ஆகிறது. உடலில் தெம்பு இருக்கும்வரை தட்டு வண்டியில் நாள்தோறும் திருக்குறளை எழுதுவேன்...' என கூறியது மெய்சிலிர்க்க வைத்தது.

***

ஆர். முரளி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us