PUBLISHED ON : செப் 29, 2013

இப்போதெல்லாம், மனிதர்களின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அதிலும், தென் கொரியாவைச் சேர்ந்த, யோனையுன் என்ற இளம் பெண்ணின் ஆசை, அவரை, அந்த ஆசைக்கு, அடிமையாகவே, மாற்றி விட்டது. இந்த பெண்ணுக்கு, 'பிகினி' என அழைக்கப்படும், நீச்சல் உடைகள் மீது, அதிக ஆர்வம். பிரபலமான மாடல் அழகி என்பதால், நீச்சல் உடையை அணிவதற்கு, இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. துவக்கத்தில், நீச்சல் குளங்களிலும், மாடலிங் ஷோக்களில் மட்டுமே, இந்த உடையை அணிந்து வந்த இவர், இப்போது, வீட்டிலும், அணியத் துவங்கி விட்டார். சமையல் செய்யும்போது, விருந்தினர்கள் வரும்போது என, நாள் முழுவதுமே, நீச்சல் உடையில் தான், வலம் வருகிறார். சமீபகாலமாக, தூங்கும்போது கூட, நீச்சல் உடையை அணிந்து தான், தூங்குகிறார். இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த வினோத பழக்கத்தை மாற்ற முடியாமல், அவரின் குடும் பத்தினர், புலம்பி வருகின்றனர்.
— ஜோல்னா பையன்.
