PUBLISHED ON : பிப் 27, 2011

அ நிறம் | அளவு
திருவிடைமருதூர் சிவன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில், பிற சிவன் கோவில்களில் இருப்பது போல சிவலிங்கம் இருந்தாலும், ஒரே ஒரு வித்தியாசத்தில் மட்டும் லிங்கம் மாறுபட்டிருக்கிறது. அதாவது, இந்த லிங்கத்தில், வலது கரம் ஒன்று முளைத்திருக்கிறது.
அபயகரமாகத் தோன்றும் அமைப்புடன் இந்த லிங்கம் எப்படி இங்கே உருவானது?
இந்தத் திருவிடைமருதூர் மகாலிங்கத்திடம் வந்து, ஆதிசங்கரர், தெய்வீகத் தத்துவம் பற்றி குழப்பத்துடன், தன் மன வருத்தத்தை தெரிவித்தபோது, அந்த லிங்கத்திடமிருந்து ஒரு கரம் தோன்றி, 'அத்வைதமே உண்மையானது...' என்று கூறி, அவருக்குத் தெளிவை தந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்ச்சியை விளக்கும் வகையில்தான், அபயகரத்துடன் கூடிய சிவலிங்கம் இருப்பதாக கூறுகின்றனர். ***
