PUBLISHED ON : பிப் 27, 2011

திருஇடைச்சுரம் ஊரில் உள்ள ஞாலபுரீஸ்வரர் ஆலயம், திருஈங்கோய் மலை மரகதாலேஸ்வரர் ஆலயம் ஆகிய இரண்டு இடங்களிலும், சிவபெருமானின் திருமேனி பச்சைக்கல் மரகதத்தால் ஆனவை. இங்கு, சிவபெருமான் பச்சை நிறத் திருமேனி உடையவராகத் திகழ்கிறார். ***
சகஸ்ரலிங்கம்!
* ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறு சிறு லிங்கங்கள் செதுக்கப்பட்டிருப்பது சகஸ்ரலிங்கம் எனப்படும். திருவிரிஞ்சை, திருக்காளத்தி முதலிய தலங்களில் இத்தகைய லிங்கங்கள் உள்ளன.
* திருக்கோட்டையூரில் ஒரே ஒரு லிங்கத்தில், கோடி லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இறைவனது பெயர் கோடீஸ்வரர்.***
சிவன் தலையில் நண்டு வளை!
நீடுரில் ஒரு நண்டு, சிவபெருமானை வணங்கியதால், சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர். எட்டு கைகளுடன் சிவபெருமான்! காஞ்சியில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில், சிவபெருமான் எட்டு கைகளுடன் வீற்றிருக்கிறார்.***
