தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குண்டாக இருந்தால் ஆபத்தா?

குண்டாக இருந்தால் ஆபத்தா?

குண்டாக இருந்தால் ஆபத்தா?


PUBLISHED ON : பிப் 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஐயோ... டாக்டர் டயட்டில் இருக்க சொல்கிறார்; என்னால் நாக்கை கட்டுப்படுத்தவே முடியவில்லை...'என்று புலம்புபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. தொந்தியும், தொப்பையுமாக, குண்டாக இருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் வராது என, டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. மூன்று லட்சத்து, 50 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வின்படி, உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. 'அதிக எடை ஆபத்தானது...' என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கின்றனர் இந்த டாக்டர்கள். 'அதிக எடை உள்ளவர்கள், பலதரப்பட்ட உணவு வகைகளை, கட்டுப்பாட்டுடன் சாப்பிடலாம், உடற்பயிற்சியும் செய்யலாம். எடை குறையவில்லையே என, அவர்கள் கவலைப்பட வேண்டாம்...' என்கின்றனர். எனவே, இனி உடல் எடையைக் குறைக்க வாயை கட்டாதீர்கள். அதனால், எந்த பயனும் ஏற்படாது.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us