PUBLISHED ON : பிப் 27, 2011

அ நிறம் | அளவு
ஆன்மஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற இம்மூன்றும் ஒன்று சேர்ந்ததே சிவலிங்கம். லிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி, சிவலிங்கத்தைச் சூழ்ந்துள்ள ஆவுடையார் அருட்ஜோதி, மேல்நோக்கி இருக்கும் சிவலிங்கம் சிவஜோதி. இந்த மூன்றும் சேர்ந்துதான், சிவலிங்கமாய் காட்சி அளிக்கிறது. ***
வேறு வேறு வடிவங்களில் சிவன்!
கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள ஸ்ரீமகாதேவர் ஆலயத்தில், ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வடிவில் காட்சி தருகிறார் சிவன். அதிகாலை துவங்கி, எட்டு மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், உச்சிப் பொழுதில் கிராத வேடுவ வடிவிலும், மாலையில் பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோருடன் குடும்ப சகிதமாகவும் காட்சி தருகிறார் ஸ்ரீமகாதேவர். உச்சிப் பொழுதில் இவருக்கு அபிஷேகம் நடைபெறும்.***
