தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/லட்சக்கணக்கில் பெருகும் பென்குயின்!

லட்சக்கணக்கில் பெருகும் பென்குயின்!

லட்சக்கணக்கில் பெருகும் பென்குயின்!


PUBLISHED ON : பிப் 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதியில் காணப்படும் உயிரினம், 'பென்குயின்!' இந்த பென்குயின்கள் எண்ணிக்கை ஒரு தீவில் லட்சக் கணக்கில் பெருகி விட்டன.

தெற்கு அட்லாண்டிக் கடலில் ஜார்ஜியாவின் தென் பகுதியில் உள்ள மக்களே வசிக்காத ஒரு தீவில் தான் இவ்வாறு அவைகள் பெருகி விட்டன. இந்த தீவில் மட்டும் மூன்று லட்சம் பென்குயின்கள் உள்ளன.

இந்த பென்குயின்கள் வித்தியாச மானவை. பனிப்பாறைகள் மிதக்கும் கடலுக்குள் புகுந்து, மீன்களை பிடித்து சாப்பிடும். கரையில் சிறிது தூரம் பறவைகளைப் போல பறக்கும். பறவை மற்றும் மீன் இன கலவையாக காணப்படும் இந்த பென்குயின்கள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், மனிதர்கள் வசிக்காத இடத்தில், மனிதர்கள் வசிக்க முடியாத குளிர் பிரதேசத்தில் வசிப்பதால் மனிதர்களால் வேட்டையாடப் படுவதும் கிடையாது. இந்த காரணங்களால் பென்குயின்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

பிரிட்டனுக்கு சொந்தமான இந்த தீவுக்கு, இப்போது பலர் சுற்றுலாவாக செல்லத் துவங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், பென்குயின்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என, கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் கவலை அடைகின்றனர்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us