தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாதனை பெண் சாந்தி சேத்தி!

சாதனை பெண் சாந்தி சேத்தி!

சாதனை பெண் சாந்தி சேத்தி!


PUBLISHED ON : மே 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்கள் எதையும் சாதிப்பர் என்று சொன்னாலும், இந்தியாவை பொறுத்தவரை இன்னமும் கடற்படையில் பணிபுரிய பெண்கள் முன்வருவதில்லை. அதற்கான படிப்பில் சேரவே இன்னும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம்.

இந்நிலையில், ஒரு பெண் பல வருடங்களுக்கு முன் கடல்சார் கல்வியை விரும்பி படித்ததுடன், படிப்படியாக முன்னேறி, அந்தத் துறை ஆண்களே வியக்கும்படியாக தலைமை தளபதியாக உயர்ந்து இருக்கிறார்.

அதுவும் எங்கே தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமையும், நவீனமும் மிகுந்த அமெரிக்க டிகோட்டர் போர்க்கப்பலின் கமாண்டராக பதவி ஏற்றுள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலின் முதல் பெண் கமாண்டர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான இவரால், நமக்கு பெரிய பெருமை உள்ளது. ஆம்... இவர் ஒரு இந்திய வம்சாவளி!

பெயர்: சாந்தி சேத்தி. இந்திய தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தவரான இவர், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் அமெரிக்கா வில்தான். 93ம் ஆண்டு படிப்பை முடித்தவர், படித்த கையோடு கடற்படையில் ஓரு அதிகாரியாக உள்ளே நுழைந்தார்.

மாதக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டும், பல நாட்கள் தண்ணீர் பிரதேசத்தில்தான் மிதக்க வேண்டும், ஒரு நாளைக்கு ஒரு நாடு, ஒவ்வொரு நாட்டிலும் ஓவ்வொரு தட்பவெட்ப சூழ்நிலை, நினைத்த நேரத்தில் வீட்டிற்கு போக முடியாது, உடம்பை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, கடல் துறையில் வேலை பார்க்க என்னவெல்லாம் நெகட்டிவாக சொல்வரோ, அதை எல்லாம் பாசிட்டிவாக எடுத்து, கடலே தன் வாழ்க்கை என, கடுமையாக உழைத்ததன் எதிரொலியாக, இன்று இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்துள்ளார்.

போர் புரியவும், அமைதி ஏற்படுத்தவும், மீட்பு பணிக்காகவும் பல நாடுகளுக்கு சென்ற அனுபவமும் இவருக்கு நிறையவே உண்டு.

சாந்தி சேத்தி கமாண்டராக இருக்கும் போர்க்கப்பலில், 278 வீரர்கள் உள்ளனர். இதில், 45 பேர் பெண்கள்; அவர்களில், எட்டு பேர் உயரதிகாரிகள். சமீபத்தில் நட்பு ரீதியாக தன் அணியோடு கப்பலில் இந்திய பயணம் மேற்கொண்டவருக்கு, சென்னை ரொம்பவே பிடித்துப் போனது. முதல் முறையாக வந்த போதிலும், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விரும்பாமல், சமூக சேவை மையங்களுக்கு சென்று, நிறைய உதவிகள் செய்துவிட்டு வந்தார்.

கமாண்டருக்கே உரிய மிடுக்கோடு கம்பீரமாக மூன்று நாட்களும் சென்னையில் பம்பரமாக சுற்றி வந்தார். 'என்ன வயது?' என்ற கேள்விக்கு, 'உழைக்கிற வயது' என்று கூறி, புன்னகைத்தார். பொதுவாக, தன்னைப் பற்றி சொல்வதை விட, தன் அணியைப் பற்றி சொல்வதிலும், அந்த அணியின் பணியைப் பற்றி விவரிப்பதிலுமே அதிக ஆர்வமாக உள்ளார்.

இந்திய வம்சவாளிப் பெண் சாந்தி சேத்தியை முன்மாதிரியாகக் கொண்டு, அமெரிக்க பெண்கள் பலர் கடல்சார் கல்வியில் புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர். விரைவில் கடல் களத்தையும், வளத்தையும் பெற நம்மூர் பெண்களும் முன் வருவரா! ***

எஸ்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us