PUBLISHED ON : டிச 18, 2022

எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர்., சுடப்பட்டபோது, சென்னையில் பல இடங்களில் வன்முறையும், கொள்ளையும் அரங்கேறியது. எம்.ஆர்.ராதா மீது ஏற்பட்ட ஆத்திரத்தில், அவருக்கு சொந்தமான வீடுகளை தீ வைத்து கொளுத்தினர்.
இதில், ராதாவின் இன்னொரு மனைவி மற்றும் அவரது மகள்களான ராதிகா மற்றும் நிரோஷா வாழ்ந்து வந்த வீட்டையும் வன்முறையாளர்கள் சூழ்ந்தனர். வன்முறைக்கு பயந்து வீட்டை காலி செய்ய நினைத்தபோது, சென்னையில் யாரும் இவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க முன் வரவில்லை.
இந்நிலையில், நடிகை ஷீலாவும், அவரது தாயாரும், சாந்தோமில் உள்ள தங்கள் வீட்டில் அவர்களை வாடகைக்கு குடியமர்த்தினர்.
ஷீலா, 13 வயதில், பாசம் படத்தில், எம்.ஜி.ஆருடன் நடித்தவர். அதன்பின், முழுநேர மலையாள நடிகை ஆனவர்.
'எங்க வீட்டில் குடியிருந்தபோது தான், இயக்குனர் பாரதிராஜா, ராதிகாவை முதன் முதலில் நடிக்க வைத்தார்...' என்கிறார், ஷீலா.
— ஜோல்னாபையன்