PUBLISHED ON : அக் 26, 2014

அ நிறம் | அளவு
ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் அனைவரும் பீதியில் உறைந்து போயுள்ளனர். முன்னணி நடிகைகள் சிலரின் நிர்வாண புகைப்படங்கள், இன்டர்நெட்டில் வரிசை கட்டி வெளியாவது தான் இதற்கு காரணம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி காரா டெல்விஜ் மற்றும் நடிகை அன்னா கென்ட்ரியா ஆகியோரை தொடர்ந்து, மற்றொரு பிரபல நடிகை ஜெனீபர் லாரன்சின் நிர்வாண புகைப்படங்களும் சமீபத்தில் இன்டெர்நெட்டில் வெளியாகியுள்ளன. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல; ஜெனீபரின், 55 அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால், வெளியில் தலை காட்ட முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார் ஜெனீபர். அடுத்ததாக யாருடைய புகைப்படங்கள் வெளியாகுமோ என, திக்...திக்... நிமிடங்களுடன் காத்திருக்கிறது, ஒட்டு மொத்த ஹாலிவுட்டும்.
— ஜோல்னாபையன்.
