மொபைல் போன் அடிமைகளுக்கு, சீனாவில் சிறப்பு நடைபாதை!
மொபைல் போன் அடிமைகளுக்கு, சீனாவில் சிறப்பு நடைபாதை!
PUBLISHED ON : அக் 26, 2014

மொபைல் போனுக்கு அடிமை ஆகிறவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாத்ரூம் போகும்போது, நடக்கும்போது, பஸ்சில் செல்லும்போது என, எங்கு சென்றாலும், மொபைல் போனில் பேசுவது அல்லது மெசேஜ் டைப் செய்வது, பலருக்கு வாடிக்கையாகி விட்டது.
சீனாவின், சோங்குயிங் என்ற நகரம், சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இங்கு ஏராளமானோர் வருவது வழக்கம். இங்கு, மொபைல் போனில் பேசியபடி அல்லது மெசேஜ் அனுப்பியபடி, நடந்து கொண்டே சென்ற பலர், விபத்தில் சிக்கினர். இதனால், சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்து விட கூடாது என்பதற்காக, இங்குள்ள முக்கிய சாலையை ஒட்டி, பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில், மொபைல் போனை உபயோகித்து, செல்பவருக்கு மட்டுமே அனுமதி; மற்றவர்களுக்கு அனுமதியில்லை.
— ஜோல்னாபையன்.
