PUBLISHED ON : அக் 26, 2014

குடியிருப்பை சுற்றி இருந்த இடத்தில், இரண்டு மாமரம் உள்ளன. மாம்பழ சீசனில் இலை தெரியாத அளவில் காய்கள் உருண்டையாக (ருமானி தினுசு) காய்த்துத் தள்ளிவிடும்.
அடுக்கு மாடியிலிருந்த ஒன்பது குடித்தனங்களுக்கும், மாம்பழ சீசன் அருமையான பொழுதுபோக்கு. அவற்றை எப்போது பறிக்கலாம்; எப்படி அதைப் பகிர்ந்து கொள்ளலாம்; கூலி நிர்ணயம் அது, இது என்று கூடிக்கூடி சுவையாகப் பேசுவோம்.
நமக்கு வருகிற பங்கில், நமக்கு தெரிந்தவர்களுக்கு பட்டுவாடா செய்யப்போகிற கணக்கு, குடும்பத்தினரின் யோசனைகள்... என, ஒரே திருவிழா கலாட்டாவாக இருக்கும்.
'திருவிழாவோ, பண்டிகையோ கொண்டாட வேண்டாம்; இந்தாங்க, 1,000 ரூபாய்...' என்றால் மகிழ்ச்சி ஏற்படுமா? எல்லாருக்கும் அதே எண்ணம்தான். என்ன செய்வது? அடுத்த காய்ப்புவரை பொறுமையாக இருந்து, ஊர்பூரா காய்களை சப்ளை செய்வது என்று தீர்மானித்துள்ளோம்.
— பாக்கியம் ராமசாமி.
