PUBLISHED ON : ஜன 21, 2018

அ நிறம் | அளவு
காட்டிலிருந்து ஊருக்குள் புகும் யானைகள், மனிதர்களை கொல்வதும், உடைமைகளை தகர்ப்பதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. அதனால், கேரள விவசாய பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர், எஸ்.கோபகுமார், காட்டு யானை, ஊருக்குள் வரும்போது, 2 கி.மீ., தொலைவிலேயே மொபைல் போனில் தகவல் கிடைத்து விடும் விதமாக, ஒரு தொழில்நுட்பத்தை, உருவாக்கியுள்ளார்.
இந்த சக்தி வாய்ந்த கேமராக்கள், யானைகள் நடமாட்டம் நிறைந்த காடுகளில், மரங்களில் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம், யானைகள் வருகை பற்றி உடனடியாக மொபைல் போனிலிருந்து தகவல் வந்துவிடும் என்கிறார், கோபகுமார்.
— ஜோல்னாபையன்.
